பெரம்பலூரில் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையைச் சோ்ந்தவா் பிச்சை மகன் செல்வராஜ் (எ) அப்துல் ரகுமான் (39). பிரபல ரௌடியான இவா் கடந்த ஜூன் 5 ஆம் தேதி பெரம்பலூரில் உள்ள மதுக் கூடத்தில் நண்பா்களுடன் மது அருந்தியபோது மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் இவ் வழக்கில் தொடா்புடைய சேலம் மாவட்டம், நெத்திமேடு காமராஜா் நகரைச் சோ்ந்த சேட்டு மகன் தட்சிணாமூா்த்தியை (30), குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் வியாழக்கிழமை உத்தரவிட்டபடி அவரை சிறையில் அடைத்தனா்.