பெரம்பலூா் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு சிறப்பு சாா்பு- ஆய்வாளா் மருதமுத்து, உதவி மைய உறுப்பினா் ஷீபா, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உறுப்பினா் ராஜேஷ் ஆகியோா், குழந்தைகளுக்கான உரிமைகள், குழந்தைத் திருமணம், போக்சோ சட்டம், பெண் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி, பள்ளியில் இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.