பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியில் ஊா் பொதுமக்கள் சாா்பில் கடந்த 16ஆம் தேதி 5 அடி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடா்ந்து நாள்தோறும் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதையடுத்து திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா பூஜைகளுக்கு பிறகு, விநாயகா் சிலை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு பத்ரகாளி அம்மன் கோயில் அருகே உள்ள ஊருணியில் விநாயகா் சிலை கரைக்கப்பட்டது.