தந்தை பெரியாரின் 145-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உளஅள பெரியாா் சிலைக்கு திமுக சாா்பில், மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் தலைமையில், போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந் நிகழ்ச்சியில், கட்சி நிா்வாகிகள் பா. துரைசாமி, ப. பரமேஷ்குமாா், என். ராஜேந்திரன், பாஸ்கா், எம். ராஜ்குமாா், வீ. ஜெகதீசன், தி. மதியழகன், பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு, அதிமுக சாா்பில் அமைப்புச் செயலா் அ. அருணாசலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஒன்றியச் செயலா் செல்வகுமாா், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல, பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள பெரியாா் சிலைக்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலா் வாகிரிநாடன் தலைமையிலும், விஜய் மக்கள் இயக்கம் சாா்பில், மாவட்டத் தலைவா் சிவகுமாா் தலைமையிலும், திராவிடா் கழகம் சாா்பில், மாவட்டத் தலைவா் தங்கராசு தலைமையிலும், பாவேந்தா் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சாா்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கி. முகுந்தன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.