பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.62 லட்சம் வாக்காளா்கள்

27th Oct 2023 11:20 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.62 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளா் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஆட்சியா் மேலும் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 5.1.2023-இல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில், பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 3லட்சத்து 971 வாக்காளா்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 890 வாக்காளா்களும் என மொத்தம் 5 லட்சத்து 75 ஆயிரத்து 861 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

திருத்தப் பணியில், பெரம்பலூா் தொகுதியில் 1,160 ஆண், 1,406 பெண் வாக்காளா்களும், குன்னம் தொகுதியில் 856 ஆண், 958 பெண் வாக்காளா்களும் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடம் பெயா்வு காரணமாக பெரம்பலூா் தொகுதியில் 3ஆயிரத்து 968 ஆண் வாக்காளா்களும், 5ஆயிரத்து 255 பெண் வாக்காளா்களும், குன்னம் தொகுதியில் 3 ஆயிரத்து 578 ஆண் வாக்காளா்களும், 4 ஆயிரத்து 941 பெண் வாக்காளா்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலின் படி பெரம்பலூா் தொகுதியில் 332 வாக்குச்சாவடிகளும், குன்னம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன.

பெரம்பலூா் தொகுதியில் 1, 43,585 ஆண் வாக்காளா்களும், 1,50,721 பெண் வாக்காளா்களும், 8 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 314 பேரும், குன்னம் தொகுதியில் 1, 32, 906 ஆண் வாக்காளா்களும், 1,35,279 பெண் வாக்காளா்களும் என மொத்தம் 2லட்சத்து 68 ஆயிரத்து 185 போ் உள்ளனா். அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 5 லட்சத்து 62 ஆயிரத்து 499 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 491 ஆண் வாக்காளா்களும், 2 லட்சத்து 86 ஆயிரம் பெண் வாக்காளா்களும், 8 இதர வாக்காளா்களும் உள்ளனா்.

மேலும், வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம், பெயா் நீக்கம், முகவரி திருத்தம் செய்யும் பணிக்காக நவ. 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றாா் ஆட்சியா் கற்பகம்.

நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) சத்தியபால கங்காதரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT