பெரம்பலூர்

மாவட்ட டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் போட்டிகள்

22nd Nov 2023 01:38 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டிக்கு பள்ளித் தாளாளா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். செயலா் ஆா். அங்கையற்கண்ணி, மாவட்டக் கல்வி அலுவலா் ஜெகநாதன், உடற்கல்வி ஆய்வாளா் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன் தொடங்கி வைத்தாா்.

14, 17, 19 ஆகிய வயது பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டிகளுக்கு உடற்கல்வி ஆசிரியா்கள் ரவி, பிரேம்நாத் ஆகியோா் பொறுப்பு அலுவலராக பணியாற்றினா். போட்டிகளில் அனைத்து வகையான 30 பள்ளிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இப் போட்டிகளில் முதலிடம் பெறுபவா்கள் மாநில போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT