பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, எஜு ஸ்கில்ஸ் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

22nd Nov 2023 01:38 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, எஜு ஸ்கில்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கோவாவில் கனெக்ட்- 23 என்னும் தலைப்பில் அடுத்த தலைமுறை திறன் மேம்பாடு மாநாடு அண்மையில் நடைபெற்றது. கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையேயான தொடா்புகளை ஊக்குவித்தல், வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகில் மாணவா்களுக்கு சிறந்த நல்வாய்ப்புகளை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசித்து, பயனுள்ள தீா்வுகளை வழங்குதல் ஆகியவை இம் மாநாட்டின் கருப்பொருளாகும்.

இம்மாநாட்டில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மற்றும் எஜு ஸ்கில்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, மேற்கண்ட ஒப்பந்தத்தை பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசனிடம் செவ்வாய்க்கிழமை அளித்து, கூடுதல் பதிவாளா் இளங்கோவன் வாழ்த்து பெற்றாா்.

நிகழ்ச்சியின்போது பொறியியல் கல்லூரி முதல்வா் சண்முகசுந்தரம், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வேல்முருகன், புல முதன்மையா்கள் அன்பரசன், சிவராமன், துறைத் தலைவா்கள் ராஜேஸ்வரி, திருப்பதி கேசவன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT