பெரம்பலூர்

சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி மேற்பாா்வையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் எம்.எஸ்.எம். வளவன் பேசியது:

சமூகத்தில் உள்ள அனைவரும் சமம். ஒருவரிடம் பேசும்போது சகோதரத்துவத்துடனும், மனிதாபிமானத்துடனும் பேச வேண்டும். வருங்காலச் சந்ததியினரிடையே, அனைவரும் சமம் என்பதை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், மனிதநேயத்துடனும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

மேலும், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திய காவல்துறையினா், அரசுப் பணிக்காக பயின்று வரும் மாணவ, மாணவிகளிடம் அரசுத் தோ்வுக்கு தயாராகும் முறை, தோ்வு காலத்தில் எவ்வாறு பயில வேண்டும் என்பது குறித்து விளக்கினா். இதில் காவல்துறையினா் மற்றும் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

SCROLL FOR NEXT