பெரம்பலூர்

பெரம்பலூரில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாக காந்தி சிலை எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் ஒன்றியச் செயலா் பி. முத்துச்சாமி தலைமை வகித்தாா். நகரச் செயலா் கே. ஜெயராமன், விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம், ஏஐடியுசி மாவட்டச் செயலா் சி. சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், முன்னாள் மாவட்டச் செயலா் அ. வேணுகோபால் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் எம்ஆா்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள அனைத்துத் துறைக்கும் நிரந்தர சிறப்பு மருத்துவா்களை நியமிக்க வேண்டும். நகராட்சிக்குள்பட்ட அனைத்து விரிவாக்கப் பகுதியிலும் புதைசாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தடையின்றி கோதுமை, மண்ணெண்ணெய், அரிசி வழங்கிட வேண்டும். பெரம்பலூரில் தொடரும் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள் ஆ. தங்கவேல், ஏ. கல்யாணி, ஜே. நடராஜன், என். ராமதாஸ், எஸ். மேகச்சந்திரன், கே. பெரியசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஒன்றிய துணைச் செயலா் ஆா். சின்னதுரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT