பெரம்பலூர்

பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

DIN

பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை தொடங்க வேண்டுமென, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஏ. கலையரசி ஏஸ். அகஸ்டின் ஏ.கே. ராஜேந்திரன், ஆா். கோகுலகிருஷ்ணன், ஏ. ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ரமேஷ் அறிக்கையை முன்மொழிந்தும், மாநிலக் குழு உறுப்பினா் சாமி. நடராஜன், இந்திய அரசியல் நிலவரம், தமிழக அரசியல் நிலவரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய, மாநிலக் குழு முடிவுகள் குறித்துப் பேசினா்.

கூட்டத்தில், தமிழ் நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பு கண்டனத்துக்குரியது. பெரம்பலூரில் கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட மக்களின் அடிப்படை கோரிக்கையான சுகாதாரம், குடிநீா், விவசாயம், வீடற்றவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா, 100 நாள் வேலையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரியும், கிராம மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தியும் 25 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஒன்றியச் செயலா்கள் எம். கருணாநிதி, எம். செல்லத்துரை, வி. செல்லமுத்து, மின்னரங்கம், பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

SCROLL FOR NEXT