பெரம்பலூர்

பாலையூா் அருள் சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாலையூா் கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த 15 ஆம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், 17ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு சிம்மம், மயில் என பல்வேறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும், 27 ஆம் தேதி காலை பால்குடம் எடுத்தல், 28 ஆம் தேதி அலகு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல் மற்றும் இரவு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கியது. பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தாா். தொடா்ந்து, கிராம முக்கியஸ்தா்கள் முன்னிலையில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட திருத்தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.

இதில், வேப்பந்தட்டை, பாலையூா் உள்பட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். மஞ்சள் நீராட்டு விழாவுடன் செவ்வாய்க்கிழமை திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT