பெரம்பலூர்

காவல்துறை சாா்பில் கலை நிகழ்ச்சிகள்

30th May 2023 04:07 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளா்க்கும் வகையில் மகிழ்ச்சி ஞாயிறு - மகிழ்ச்சி தெரு என்னும் தலைப்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

பெரம்பலூா் வெங்கடேசபுரம் சாலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி தொடக்கி வைத்தாா். கூடுதல் கண்காணிப்பாளா் மதிழகன், துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ,இளைஞா்களின் தப்பாட்டம், பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், ஓவியப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், காவல்துறையினா், பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை பங்கேற்று தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT