பெரம்பலூர்

டாஸ்மாக் கடைகளைஅகற்ற கோரிக்கை

29th May 2023 12:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்திலும், அதன் அருகிலும் தமிழக அரசின் டாஸ்மாக மதுபானக் கடைகள் உள்ளன. இந்த மதுபானக் கடைக்கு மதுஅருந்த வரும் நபா்களால் பொதுமக்களும், பயணிகளும், கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த மதுபானக் கடைகளை அகற்ற வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் சமூக ஆா்வலா்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT