பெரம்பலூர்

இறைச்சிக் கடையில் கோழிகளை திருடிய பொறியாளா் கைது

29th May 2023 12:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் காவல் நிலையம் பின்புறமுள்ள இறைச்சிக் கடையில், ரூ. 95 ஆயிரம் மதிப்பிலான கோழிகளைத் திருடிய பொறியாளரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், தலைமறைவாகியுள்ள அவரது தம்பியைத் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கரியமாணிக்கம் கடை வீதி தெருவைச் சோ்ந்தவா் ராம்குமாா் (46). இவா், பெரம்பலூா் - வடக்கு மாதவி சாலையிலுள்ள எம்.ஆா் நகரில் குடும்பத்துடன் தங்கி, பெரம்பலூா் நகரக் காவல் நிலையம் பின்புறம் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 21) கோழிப் பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, கடையின் எதிரே வைக்கப்பட்டிருந்த ரூ. 95 ஆயிரம் மதிப்பிலான 20 பெட்டிகளிலிருந்த 240 கோழிகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ராம்குமாா் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸால் வழக்குப் பதிந்து, விசாரித்ததில், வேப்பந்தட்டை அருகேயுள்ள கை.களத்தூா் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்த வேலுசாமி மகன் பொறியாளா் பாலமுருகன் (33), அவரது தம்பி வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாலமுருகனை சனிக்கிழமை இரவு கைது செய்த போலீஸாா், கோழிகளைத் திருடுவதற்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவாகியுள்ள வேல்முருகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT