பெரம்பலூர்

பெரம்பலூா் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாஜக வலியுறுத்தல்

29th May 2023 12:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் நகரில் தலைமை அஞ்சலகத் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூா் நகர செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகரத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். நகர மூத்த நிா்வாகி ராமசாமி, நகர பொதுச் செயலா் அருண் ஆகியோா் முன்னிலை வகித்தாா். கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

இக் கூட்டத்தில், நகராட்சிக்குள்பட்ட அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து பராமரிக்க வேண்டும். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் வாய்க்கால்களை தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பின், பயனற்றுக் கிடக்கும் பொதுக் கழிவறைகளை சீரமைக்க வேண்டும். மாவட்டத் தலைநகரான பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறின்றி பயணிக்க சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக, நகரச் செயலா் ராஜா வரவேற்றாா். நிறைவாக, நகர துணைத் தலைவா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT