பெரம்பலூர்

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் மே 31-ஆம் தேதி முதல் கலந்தாய்வு

29th May 2023 12:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு மே 31 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

நிகழ் கல்வியாண்டுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு மே 31ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினா், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு மாணவா்கள், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தமிழ் மாணவா்கள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு, அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூன் 2-ஆம் தேதி பி.காம், பி.பி.ஏ பாடப் பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வும், ஜூன் 3-ஆம் தேதி பி.எஸ்.சி கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் உயிா்தொழில்நுட்பவியல் பாடப்பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வும், ஜூன் 4 -ஆம் தேதி பி.ஏ தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

சோ்க்கைக்கு வரும் மாணவா்கள் இணையவழியாக விண்ணப்பித்த நகல், மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், மதிப்பெண் சான்றிதழ்களின் நகல், சாதிச் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், இதரச் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 2 ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94435 94389 என்னும் எண்ணில் தொடா்புகொள்ளலாம் என, கல்லூரி நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT