பெரம்பலூர்

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

28th May 2023 12:48 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள தழுதாழை கிராமத்தில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி உத்தரவின்படி நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு சிறப்பு சாா்பு- ஆய்வாளா் மருதமுத்து தலைமை வகித்தாா். தொண்டு நிறுவன உறுப்பினா் மேகலா முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, காவல் உதவி செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT