பெரம்பலூர்

ஒருங்கிணைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்துக்கு பூமி பூஜை

28th May 2023 12:48 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட எறையூா் ஊராட்சியில், ஒருங்கிணைந்த ஊராட்சி மற்றும் கிராம நிா்வாக அலுவலக கட்டடத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேப்பந்தட்டை வட்டம், எறையூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.21.325 லட்சம், ஊராட்சிகளின் பங்குத் தொகை ரூ. 6.325 லட்சம், 15-ஆவது நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ. 42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கான ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வேப்பந்தட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கே. ராமலிங்கம், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, வட்டாட்சியா் துரைராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் இ. மரியதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT