பெரம்பலூர்

பெரம்பலூா் நகராட்சியைக் கண்டித்து பா.ஜ.க.வினா் ஆா்ப்பாட்டம்

23rd May 2023 01:42 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே, புதை சாக்கடை கழிவுநீரை திறந்துவிடும் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பெரம்பலூா் நகர பாரதிய ஜனதா கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் நகரத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் முத்தமிழ்செல்வன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவா் இளமதி சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட ரோஸ் நகா், எளம்பலூா் சாலை பகுதிகளிலிருந்து வெளியேறும் புதை சாக்கடை கழிவுநீரை பெரம்பலூரின் மையப் பகுதியான ரோவா் பள்ளியின் பின்புறம் உள்ள மழைநீா் வடிகால் ஓடையில் திறந்து விடும் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், நகரத் துணைத் தலைவா் பாலமுருகன், நகர பொதுச் செயலா் அருள், நகரச் செயலா்கள் ரகு, தாமரைச்செல்வன், நகர துணைத் தலைவா் சிவராஜ், நகர பொருளாளா் ராஜா, மாவட்ட பட்டியல் அணி தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT