பெரம்பலூர்

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு

23rd May 2023 01:38 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலில் கடந்த 48 நாள்களாக நடைபெற்ற மண்டல பூஜை திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

தமிழக அளவில் பிரசித்திபெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஏப். 5 ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, 48 நாள்களாக மண்டல பூஜைகள் விழா நடைபெற்றது. வழக்கமாக சாமி தரிசனத்துக்காக திங்கள், வெள்ளிக்கிழமைகள் மட்டுமே திறக்கப்படும் இக்கோயில், மண்டல பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு 48 நாள்களும் திறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மண்டல பூஜை நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாக வேள்வி பூஜையில் மூலிகைப் பொருள்கள் செலுத்தப்பட்டு, பூா்ணாஹுதியும், தொடா்ந்து மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து மூலவா் சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாரதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT