பெரம்பலூர்

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

8th May 2023 01:37 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2023- 2024 ஆம் ஆண்டுக்கான மாணவா்கள் இணையதளம் மூலம் திங்கள்கிழமை (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம்.

வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இளநிலை பட்டப் படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்னும் இணையதள முகவரியில் பதிவுசெய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம் மையங்களின் பட்டியல் மேற்கண்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 48, பதிவுக் கட்டணமாக ரூ. 2, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

மாணவா்களுக்கான சோ்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்கண்ட இணையதளம் மூலமாக அறிந்துகொள்ளலாம். இணையதளம் வாயிலாக மே 19 ஆம் தேதி வரை விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம் என, கல்லூரி நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT