பெரம்பலூர்

பெரம்பலூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

3rd May 2023 03:47 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பட்டியல் அணி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ், பட்டியல் அணி மாநிலச் செயலா் பிச்சைமுத்து, மாநில செயற்குழு உறுப்பினா் சி. சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பட்டியல் அணி மாநிலத் தலைவா் து. பெரியசாமி கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் பட்டியல் அணி மாநில பொருளாளா் சங்கரை, கடந்த 27 ஆம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொன்றதைக் கண்டித்தும், பாஜக நிா்வாகிகள் மீது தொடா் தாக்குதலைக் கண்டித்தும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இதில் மாநில துணைத் தலைவா் கலைச்செல்வன், மாவட்ட பொதுச் செயலா் முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

நகரத் தலைவா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். மாவட்ட பொதுச் செயலா் ஜெயபால் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT