பெரம்பலூர்

வாகனத்தில் சென்றவரிடம் சங்கிலி நகை பறிப்பு

3rd May 2023 10:57 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே புதன்கிழமை பிற்பகல் மோட்டாா் சைக்கிளில் சென்றவரிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேப்பந்தட்டை வட்டம், வெள்ளுவாடி கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணி மகன் முருகேசன் (42). இவா், தனது நண்பரான ஏழுமலையுடன் வேப்பந்தட்டையிலிருந்து கிருஷ்ணாபுரத்துக்கு புதன்கிழமை பிற்பகல் மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, கிருஷ்ணாபுரம் அரிசி ஆலை அருகே சென்றபோது, அவா்களை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத 2 போ் முருகேசன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT