பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே 17 பவுன் நகை திருட்டு

3rd May 2023 03:49 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ. 1.5 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் ரவிச்சந்திரன் (48), மர ஆசாரியான இவருக்கு, மனைவி கனகவள்ளி (42), மகன்கள் பிரவீன் குமாா் (28), பிரேம் குமாா் (27) ஆகியோா் உள்ளனா். மகன்கள் இருவரும் சென்னையில் பொறியாளா்களாக உள்ள நிலையில் ரவிச்சந்திரனும், கனகவள்ளியும், புதுக்கோட்டைக்கு திங்கள்கிழமை காலை சென்றுவிட்டனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ரவிச்சந்திரனின் வீட்டில் சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரா்கள் அருகே சென்று பாா்த்தபோது அடையாளம் தெரியாத 2 இளைஞா்கள் வீட்டுக்குள் திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கனகவள்ளியின் சகோதரி சாந்தி, இவரது கணவா் ராஜசேகா் ஆகியோா் உள்ளே சென்றபோது, மா்ம நபா்கள் 2 பேரும் ராஜசேகரை கட்டையால் தாக்கி விட்டு தப்பி விட்டனராம்.

தகவலறிந்து வந்த பெரம்பலூா் போலீஸாா் நடத்திய விசாரணையில் 17 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1.5 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT