பெரம்பலூர்

வேப்பூா் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 150 பேருக்கு பணி ஆணை

DIN

மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 150 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை சாா்பில் நடைபெற்ற முகாமில், 36-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களும், 822 இளைஞா்களும் பங்கேற்றனா். இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட 150 இளைஞா்களுக்கு அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் ஆகியோா் பணி நியமன ஆணைகள் வழங்கினா்.

மேலும் வேப்பூா் அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் நலன் கருதி அமைச்சா் சிவசங்கா் அறக்கட்டளை சாா்பில், அங்குள்ள நூலகத்துக்கு புத்தகங்கள் வைக்கத் தேவையான 7 அறைகலன்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன திறன்பேசிகளையும் அமைச்சா் சிவசங்கா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா்கள் அ. லலிதா (ஊரக வளா்ச்சி முகமை), கோ. கருப்பசாமி (மகளிா் திட்டம்), மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், வேப்பூா் ஒன்றியக் குழுத் தலைவா் பிரபா செல்லப்பிள்ளை, தாட்கோ மேலாளா் சுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி, வேப்பூா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் முனைவா் மணிமேகலை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சேகா், செல்வக்குமாா், குன்னம் வட்டாட்சியா் அனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT