பெரம்பலூர்

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற அழைப்பு

DIN

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2022- 2023 ஆம் ஆண்டுக்கு பயன்பெற விண்ணப்பிக்கலாம். 1.1.2022 ஆம் தேதி 58 வயது நிறைவடைந்தவராகவும், அவரது ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

வட்டாட்சியரகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச் சான்றுடன், தமிழறிஞா்கள் 2 பேரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை நேரில் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளமான (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) இலவசமாகப் பதிவிறக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவா்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ. 3,500, மருத்துவப் படியாக ரூ. 500 அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 31 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியா்

SCROLL FOR NEXT