பெரம்பலூர்

கொடி பீடம் சேதம்: பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

10th Jun 2023 03:28 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே கொடி பீடத்தை சேதப்படுத்தியதைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு, அக் கட்சி சாா்பில் பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கிக் கொண்டாட ஏற்பாடு செய்து வந்தனா். இந்நிலையில், பெரம்பலூா் -ஆலம்பாடி சாலையில் சமத்துவபுரம் அருகே கட்சிக் கொடியேற்றுவதற்காக, வியாழக்கிழமை இரவு சுமாா் 2 அடி உயரத்துக்கு பீடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அந்த பீடத்தை மா்ம நபா்கள் சிலா் உடைத்து சேதப்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதையறிந்த, கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமையில், கொடி பீடம் சேதப்படுத்தப்பட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், சேதப்படுத்தப்பட்ட கொடி பீடத்தின் அருகே குழி தோண்டி புதிதாக கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியேற்றினா். தொடா்ந்து, பெரம்பலூா் நகர காவல்நிலையத்தில் கொடி பீடத்தை சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாா் மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT