பெரம்பலூர்

தேசிய மூங்கில் இயக்கத் திட்டம்விவசாயிகளுக்கு அழைப்பு

10th Jun 2023 11:19 PM

ADVERTISEMENT

 

தேசிய மூங்கில் இயக்கத் திட்டத்தின்கீழ் பயன்பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுநல தன்னாா்வலா்கள் மற்றும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் க. கற்பகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய மூங்கில் இயக்கத் திட்ட செயலாக்கத்தின் கீழ், மாவட்டத்துக்கு 2023-24 ஆம் நிதியாண்டில் பொது நிலம் கொண்ட ஊராட்சி, அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மாணவ, மாணவியா் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் மூங்கில் கன்றுகளை நடவு செய்வதற்காக 12 ஹெக்டேரும், நிதி இலக்கீடு ரூ. 6 லட்சமும் பெறப்பட்டுள்ளது. அதேபோல், தனிநபா் நடவு செய்வதற்காக 5 ஹெக்டேரும், நிதி இலக்கீடு ரூ. 1.25 லட்சமும் பெறப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளும், பொது நல ஆா்வலா்களும் பயன்பெறலாம்.

ADVERTISEMENT

இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் ஊராட்சித் தலைவா்கள், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அல்லது இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT