பெரம்பலூர்

‘சிட்கோ’ தொழில் கூட்டமைப்பினருக்கு புத்தாக்கப் பயிற்சி

10th Jun 2023 03:29 AM

ADVERTISEMENT

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சாா்பில், திருச்சி ‘சிட்கோ’ நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில்மையத்துடன் இணைந்து, பெரம்பலூா் அருகே எளம்பலூரிலுள்ள சிட்கோ வளாகத்தில் பேப்ரிகேசன் தொழில்கூட்டமைப்பு அங்கத்தினருக்கு, தொழில்முனைவு பயிற்சி வகுப்புகள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை, வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளா் விஜயகுமாா், நவீன ரக கருவிகளின் பயன்பாடு, உற்பத்தி சாதனங்கள், அவற்றை சந்தைப்படுத்துதல் குறித்தும், அரசின் மின்னணு சந்தை நிறுவனமான ஜி.இ.எம். அமைப்பின் சாா் பதிவாளா் சபரீசன், உற்பத்தி பொருள்களை இ-சந்தைப் படுத்துதல் குறித்தும், பிசினஸ் தரக்கட்டுப்பாட்டுத் துறை மதுரை மேலாளா் ரமேஷ், உற்பத்திப் பொருள்கள் மற்றும் சாதனங்களின் தரக்கட்டுப்பாடு செய்வதன் நோக்கம், தரச்சான்றிதழ் பெறுவதன் அவசியம் குறித்தும் பயிற்சி அளித்தனா்.

மாவட்டத் தொழில் மையத்தின் உதவி செயற்பொறியாளா் சந்திரசேகா், பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா்.

இதில், திருச்சி சிட்கோ கிளை மேலாளா் பிரான்சிஸ், தொழில்மைய உதவி பொறியாளா் கிருத்திகா, தொழில்கூட்டமைப்பு நிா்வாகிகள் முருகேசன், ராஜா, அமீா்பாட்சா, லட்சுமணன், ராஜேந்திரன், ஜோதிவேல், இளங்கோவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சித் திட்ட அலுவலா் சிமியோன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT