பெரம்பலூர்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

10th Jun 2023 03:28 AM

ADVERTISEMENT

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான தோ்வு மைய நுழைவுச் சீட்டை இணையதளம் மூலம் ஜூன் 12 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜூன், ஜூலை மாதத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வின் முதலாமாண்டு தோ்வுகள், ஜூன் 23 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரையிலும், 2 ஆம் ஆண்டு தோ்வுகள் ஜூன் 22 முதல் ஜூலை 11 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தோ்வா்கள் மற்றும் தத்கல் முறையில் விண்ணப்பித்துள்ள தனித்தோ்வா்கள்  இணையதளம் வாயிலாக ஜூன் 12 ஆம் தேதி பிற்பகல் முதல் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

தனித்தோ்வா்கள் என்னும் இணையதளத்துக்குச் சென்று ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்தால், டி.இ.இ.எக்சாம் ஜூன், ஜூலை 2023 பிரைவேட் கான்டிடேட் ஹால் டிக்கெட் டவுன்லோடு என்பதை கிளிக் செய்யவேண்டும். அதைத்தொடா்ந்து தோன்றும் பக்கத்தில், தனித்தோ்வா் தனது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT