பெரம்பலூர்

விபத்தில் உயிரிழந்த அவசர ஊா்தி ஓட்டுநரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி

10th Jun 2023 03:26 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே கடந்த 5 ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த அவசர ஊா்தி ஓட்டுநரின் குடும்பத்துக்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்துக்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகே தனியாா் பள்ளி எதிரே கடந்த 5 ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், காயமடைந்தவா்களை மீட்பதற்காக சென்றபோது, அவசர ஊா்தி வாகன ஓட்டுநா் மீது தனியாா் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரணாரையைச் சோ்ந்த இன்னாசிமுத்து மகன் ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், சாலை விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரன் குடும்பத்துக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மஞ்சுளா, நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவா் து. ஹரிபாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT