பெரம்பலூர்

விடுதிகளில் தங்கி பயில பட்டியலின மாணவா்களுக்கு அழைப்பு

10th Jun 2023 11:20 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளில் தங்கிய பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளும், 14 மாணவியா் விடுதிகளும், 1 பழங்குடியினா் நல மாணவியா் விடுதியும், 1 பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளி விடுதியும் என மொத்தம் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

மேற்கண்ட விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்கள் (85%), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவா்கள் (10%) பிற வகுப்பினா் (5%) என்னும் விகிதத்தில் விடுதிகளில் சேர தோ்வு செய்யப்படுவா்.

மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவ,மாணவிகளுக்கு உதவிட சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினிகளிடம் ஜூன் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவ, மாணவிகள் பள்ளி நிா்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவனச் சான்றொப்பத்துடன் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT