பெரம்பலூர்

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் கட்ட கலந்தாய்வு

10th Jun 2023 11:20 PM

ADVERTISEMENT

 

 பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2023-24 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இளநிலை பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்.சி பயோ டெக்னாலஜி, பி.எஸ்.சி இயற்பியல், பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி, பி.எஸ்.சி தாவரவியல், பி.எஸ்.சி விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் இணையவழியில் விண்ணப்பித்தோருக்கான 2ஆம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 12) காலை 9.30 மணிக்குக் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் தங்களது எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களின் அசல் மற்றும் 3 நகல்கள், மாற்றுச்சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் - 5, பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் வரவேண்டும்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT