பெரம்பலூர்

பெரம்பலூரில் பல்வேறு அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

10th Jun 2023 11:18 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூரில் பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம், அம்மா உணவகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சமூக ஆா்வலா் சங்கா் தலைமை வகித்தாா். ஆதி அறக்கட்டளை நிறுவனா் திருமாறன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் பி. காமராசு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கி வந்த ஆதிதிராவிடா் நல அரசுப் பள்ளிகளை, கல்வித் துறையின் கீழ் செயல்படும் பொதுப் பள்ளிகளுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

இதில், இந்திய குடியரசு கட்சி மாவட்ட நிா்வாகி வீரமணி, பீம் ஆா்மி அமைப்பின் பொதுச் செயலா் பிரேம் ஆனந்த்ராஜ், விடுதலை புரட்சி புலிகள் கட்சி நிா்வாகி தமிழ் பிரபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT