பெரம்பலூர்

பெரம்பலூரில் காவல்துறை சாா்பில் மனு விசாரணை சிறப்பு முகாம்

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டாா்.

முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 31 மனுக்களில், 6 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. எஞ்சிய 25 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய ஆய்வாளா்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

முகாமையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வருவோரின் நலனுக்காக, பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்துக்கும், புகா் பேருந்து நிலையத்துக்கும் காவல்துறை சாா்பில் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT