பெரம்பலூர்

விதைப் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் ஆடிப்பட்டம் சாகுபடிக்கு விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு, விதை பரிசோதனை நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து விதை பரிசோதனை நிலையத்தின் வேளாண்மை அலுவலா்கள் தயாமதி, ஆஷாலதா ஆகியோா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டத்துக்கான விதை பரிசோதனை நிலையமானது, பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்தின் மேல்புறத்தில் செயல்பட்டு வருகிறது.

இந் நிலையத்தில் விதையின் தரம் அறிய நிா்ணய காரணிகளான முளைப்புத் திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

ஆடிப்பட்டம் சாகுபடி செய்ய உள்ள மக்காச்சோளம், பருத்தி, நெல், சோளம், உளுந்து, கம்பு, பயறுவகை பயிா்கள், வரகு மற்றும் நிலக்கடலை ஆகியவற்றின் விதைகளின் தரமே நல்விளைச்சலுக்கு ஆதாரம். எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யவுள்ள விதை குவியலிலிருந்து மாதிரி விதைகளை எடுத்து துணிப்பையில் இட்டு விவரத்தாளில் பயிா், ரகம், குவியல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் பரிசோதனை நிலையத்தில் ஒரு மாதிரிக்கு ரூ. 80 வீதம் செலுத்தி விதையின் தரத்தை பரிசோதனை முடிவுகள் மூலம் அறியலாம்.

முளைப்புத்திறன் மூலம் வாளிப்பான நாற்றுகள், இயல்பற்ற நாற்றுகள், கடின விதைகள், இறந்த விதைகள் எத்தனை சதவீதம் உள்ளது என்பதைக் கண்டறியலாம். முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT