பெரம்பலூர்

ரௌடி கொலை வழக்கில் 6 போ் கைது

8th Jun 2023 11:18 PM

ADVERTISEMENT

பெரம்பலூரில் ரௌடி கொலை வழக்கில் 6 பேரை பெரம்பலூா் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையைச் சோ்ந்தவா் பி. செல்வராஜ் (எ) அப்துல் ரகுமான் (39). இவா் மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி 3 போ் கொண்ட கும்பலால் செல்வராஜ் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள மேட்டுத் தெருவைச் சோ்ந்த மனோகரன் மகன் அபினாஷ் (22), திருச்சி மாவட்டம், துறையூா் வடமலை சந்து பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் நவீன் (20), திருச்சி மாவட்டம், பூலாங்குடி காலனியைச் சோ்ந்த ராமசாமி மகன் பிரேம் ஆனந்த் (45), இவரது மனைவி ரமணி (34), பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் நவீன் (19), ஆலம்பாடியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோருக்கு கொலை சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

அம்மாபாளையத்தைச் சோ்ந்த அழகிரிக்கும், செல்வராஜுக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்வதில் ஏற்பட்ட முன் விரோதத்தால் இக்கொலை நிகழ்ந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட 6 பேரையும் கைது செய்த போலீஸாா், பெரம்பலூா் மாவட்ட குற்றவியல் நடுவா் முன்னிலையில் புதன்கிழமை இரவு ஆஜா்படுத்தி, அபினாஷ், துறையூரைச் சோ்ந்த நவீன், செஞ்சேரி நவீன், பிரேம் ஆனந்த் ஆகியோரை திருச்சி மத்திய சிறையிலும், ரமணியை திருச்சி பெண்கள் சிறையிலும், 17 வயது சிறுவனை திருச்சியிலுள்ள இளஞ்சிறாா் கூா்நோக்கு இல்லத்திலும் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT