பெரம்பலூர்

பெரம்பலூரில் ஜூலை 1 -5 வரை ராணுவ ஆள் சோ்ப்பு முகாம்

DIN

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 16 மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கான ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் ஜூலை 1 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்தாா்.

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆன்லைனில் நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்ற 16 மாவட்ட இளைஞா்களுக்கு உடல் தகுதி, சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, தகுதியானவா்கள் ராணுவப் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

முகாமில் பங்கேற்கும் திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்ட இளைஞா்களுக்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள், பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவேடு, ஆன்லைனில் பதிவு செய்தல், இணையம், பிரிண்டா், ஸ்கேனா் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

முகாமில் நடைபெறும் நிகழ்வுகள் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட வேண்டும். இரண்டடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

முகாமில் பங்கேற்போரின் விவரங்கள் ஆன்லைன் மூலமாக பதிய, சான்றிதழ்களை சரிபாா்க்க, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனம், அவசரகால ஊா்தி, மருத்துவக் குழுவினா் தயாராக இருக்க வேண்டும். அனைத்துத் துறை அலுலா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, திருச்சி மண்டல ராணுவ ஆள்சோ்ப்பு பணி அலுவலா் கா்னல் தீபாகுமாா், மேஜா் நீலம்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், வருவாய்க் கோட்டாட்சியா் ச. நிறைமதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கள் மஞ்சுளா (பொது), நாராயணன் (ஊராட்சிகள்), நகராட்சி ஆணையா் (பொ) ராதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

தென் இந்தியாவின் உ.பி., தமிழ்நாடு!

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்!

மீண்டும் 49 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT