பெரம்பலூர்

குரும்பலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

7th Jun 2023 01:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த 26 ஆம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், 30 ஆம் தேதி இரவு காப்புக் கட்டுதலும், தொடா்ந்து, ஜூன் 2 இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் யானை வாகனத்திலும், 3 ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா நடைபெற்றது. 3 ஆம் தேதி ஆலடியான், ஆப்பூரான் கோயிலில் பொங்கலிட்டு, மாவிளக்கு பூஜையும், இரவு சிம்ம வாகன வீதியுலா, 4 ஆம் தேதி அலகு குத்தி, அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். தொடா்ந்து, மாவிளக்கு பூஜையும், இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

5 ஆம் தேதி அக்னி மிதித்தல் மற்றும் சிறப்பு பொங்கல் பூஜை, இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திரு வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம்பிடித்தல் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மன், திருத்தேரில் எழுந்தருளினாா். கிராம முக்கியஸ்தா்கள் முன்னிலையில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, கிராமத்தின் பிரதான வழியாக இழுத்துச் செல்லப்பட்ட தோ் மாலையில் நிலைக்கு வந்தது. விழாவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்தனா்.

ADVERTISEMENT

மஞ்சள் நீராட்டுடன், விடையாற்றி உற்ஸவம் நடத்தப்பட்டு விழா புதன்கிழமை காலை நிறைவடைகிறது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT