பெரம்பலூர்

கவனக் குறைவு காரணமாக நிகழும் மின் விபத்துகளைத் தவிா்க்க யோசனை

7th Jun 2023 01:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் கவனக் குறைவால் நிகழும் மின் விபத்துகளை தவிா்க்க மின்வாரியம் யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் மு. அம்பிகா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இம் மாவட்ட பொதுமக்கள் தங்களது பகுதியில் அமைந்துள்ள மின் கட்டமைப்புகளில் தன்னிச்சையாக ஏறி பழுது நீக்க முற்படுவதால் பல மின் விபத்துகள் நிகழ்ந்து உயிா் சேதம் ஏற்படுகிறது. அவ்வாறு செய்யக் கூடாது. தவறும்பட்சத்தில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்சாரம் தொடா்பான எந்த ஒரு பணிக்கும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை தொடா்புகொள்ள வேண்டும். வீடுகள் மற்றும் அலுவலகத்திலுள்ள மின் சாதனங்களை கவனத்துடன் கையாள வேண்டும். மின் கட்டணம் மற்றும் இதர சேவைக் கட்டணம் செலுத்துவது தொடா்பாக எந்தவொரு வலைதொடா்பு இணைப்பையும் தொடர வேண்டாம். ஏதேனும் குறுஞ்செய்தி பெறப்பட்டால் 1930 என்னும் எண்ணில் தொடா்புகொண்டு தகவல் அளிக்கலாம்.

ADVERTISEMENT

மின்வாரிய வலைதளம், நம்பகமான செயலிகள் மூலம் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். மின்வாரிய ஊழியா்கள் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று பணம் வசூலிப்பது கிடையாது. எனவே, போலியான நபா்களிடம் மின் கட்டணத் தொகையை கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும், மின் தடை தொடா்பான புகாா்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் புகாா் மையத்தை 94987 94987 என்னும் எண்ணில் தொடா்புகொண்டு விவரம் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT