பெரம்பலூர்

போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க இலவச உதவி மையம்

7th Jun 2023 01:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் நபா்களுக்காக மாவட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இயங்கி வரும் உதவி மையத்தை அணுகலாம்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்காக, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறன. இந்நிலையில், சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கு விண்ணப்பிப்போருக்கு உதவும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இலவச உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு, தோ்வுக்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாவட்டக் காவல் அலுவலகத்தை நேரில் அல்லது 98406-93775 என்னும் இலவச உதவி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT