பெரம்பலூர்

உலக சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடும் விழா

6th Jun 2023 02:07 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பெரம்பலூா் அருகேயுள்ள எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமை வகித்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா்.

இதேபோல், பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ,மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவா் (பொ) தனசேகரன், மரக்கன்றுகள் நடட்டு வைத்தாா். இதில், சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான சந்திரசேகா், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சேகா், அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவா் மணிவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT