பெரம்பலூர்

பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் திருஞானசம்பந்தா் குரு பூஜை

6th Jun 2023 02:13 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் திருஞானசம்பந்தா் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக் கோயிலில் நாயன்மாா்கள் மண்டபத்தில் எழுந்து அருள்பாளித்து வரும் நாயன்மாா்கள் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு திங்கள்கிழமை காலை 10.30 மணி அளவில் பால், தயிா், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாரனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பூஜைகளை, கௌரி சங்கா் சிவாச்சாரியாா் செய்து வைத்தாா். விழாவில், முன்னாள் அறங்காவலா் தெ.ப். வைத்தீஸ்வரன், வழிபாட்டுக் குழுவினா்கள் ராஜமாணிக்கம், மணி மற்றும் பொதுக்கள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT