பெரம்பலூர்

பணியின்போது இறந்த அவசர ஊா்தி ஓட்டுநருக்கு நிவாரணம் கோரி மறியல்

6th Jun 2023 02:12 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் உயிரிந்தவா்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த அவசர ஊா்தி ஓட்டுநரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, அவரது உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் உடலை மீடுகும்போது உயிரிழந்த அவசர ஊா்தி ஓட்டுநா் ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, ராஜேந்திரன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வருவாய் கோட்டாட்சியா் சா. நிறைமதி, துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா். இதனால், பெரம்பலூா் - துறையூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT