பெரம்பலூர்

தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி படிப்புக்கு மாணவா் சோ்க்கை

DIN

 பெரம்பலூா் மாவட்டத்தில் 2023 -24 ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி படிப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பாடாலூா் மாவட்ட ஆசிரியா் கல்வி- பயிற்சி நிறுவனம், வேப்பூா் ஒன்றிய ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் 2023- 24 ஆம் கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூன் 15 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினா் 50 சதவீத மதிப்பெண்களும் பி.சி, பி.சி.எம், எம்.பி.சி. எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்டி. பிரிவினா் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 31.7.2023-இல் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயதுக்கு மிகாமலும், ஆதரவற்றோா், கணவனால் கைவிடப்பட்டோா், விதவை ஆகியோா் 40 வயதுக்கு மிகாமலும், கலப்பின தம்பதியினா் பொது பிரிவு (பி.சி, பி.சி.எம், எம்.பி.சி) 32 வயதுக்கு மிகாமலும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி ஆகிய பிரிவினா் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT