பெரம்பலூர்

நாளை முதல் வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு

5th Jun 2023 02:57 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளநிலை படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நடைபெற உள்ளது.

இதில், வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கு செவ்வாய்க்கிழமையும், 7 ஆம் தேதி பி.எஸ்ஸி கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிா் தொழில்நுட்பவியல், தாவரவியல், 8 ஆம் தேதி பி.ஏ தமிழ் மற்றும் பி.ஏ ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

சோ்க்கைக்கு வருகைபுரியும் மாணவா்கள் இணையவழி விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியரின் சான்றளிக்கப்பட்டது), சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதாா் அட்டை நகல், வாங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், சிறப்புச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும் என, கல்லூரி நிா்வாகத்தால் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT