பெரம்பலூர்

ஆளில்லா சிறுவிமானம்வழியே பூச்சிமருந்து தெளிப்புசெயல்விளக்கம்

5th Jun 2023 02:56 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் அருகே வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில், கம்பு சாகுபடி வயலில் ஆளில்லா சிறுவிமானம் (டிரோன்) மூலமாக விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

வேளாண் அறிவியல் மையத்தில் அமைந்துள்ள பண்ணையில் 2023 சிறுதானிய ஆண்டைக் கருத்தில் கொண்டு, ஒரு ஏக்கரில் சுல்தானியா கம்பு ரகம் பயிரிடப்பட்டுள்ளது. இதில், கரிப்பூட்டை நோயைக் கட்டுப்படுத்த ஹெக்ஸகோனசோல் மருந்து ஆளில்லா சிறுவிமானம் மூலம் தெளிப்பதற்கான செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் மு.பு னிதாவதி, ஆளில்லா சிறுவிமானம் மூலம் நானோ யூரியா தெளித்தல், தழை, மணி, சாம்பல் சத்துகள் அடங்கிய 19:19:19 தெளித்தல் குறித்து விளக்க உரையாற்றினாா்.

இதில், வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் வசந்தகுமாா், பயிா் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் தோம்னிக் மனோஜ், தொழில்நுட்பவியலா் சதீஸ்குமாா், கள பணியாளா் வேல்முருகன் மற்றும் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT