பெரம்பலூர்

பெரம்பலூரில் குடிநீா் கோரி சாலை மறியல்

5th Jun 2023 02:57 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் நகரில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலம் 21 ஆவது வாா்டைச் சோ்ந்த பொதுமக்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில், கொள்ளிடம் கூட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே நகராட்சிக்குள்பட்ட பெரும்பாலான பகுதிகளில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், 21 ஆவது வாா்டில் கடந்த 1 வாரமாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.

இதனால் அவதியுற்ற அப்பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகம், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், தட்டுப்பாடின்றி முறையாக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தியும், பெரம்பலூா் 3 சாலை சந்திப்புப் பகுதியில் காலிக்குடங்களுடன் திடீா் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்கு சென்று உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT