பெரம்பலூர்

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் காப்பீட்டுத் தொகை மற்றும் ரூ. 60 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையை வழங்க நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுப்ரமணியன். இவா், துங்கபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மும்பையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் சுரக்சா காப்பீடு செய்திருந்தாா். இந்நிலையில், கடந்த 21.10.2021-இல் அதே கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவா் 22 ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுப்பிரமணியன் மகன் வீரமணி, காப்பீடு செய்திருந்த நிறுவனம் மற்றும் துங்கபுரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை மேலாளா் ஆகியோரிடம் காப்பீட்டுத் தொகையை கேட்டு விண்ணப்பித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இவ் வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்றத் தலைவா் ஜவகா், உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா் கொண்ட குழுவினா், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்காகவும் வீரமணியின் மன உளைச்சலுக்கு காரணமாகவும் நிவாரணத்தொகையாக ரூ. 50ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.1 0 ஆயிரமும், காப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சத்தையும் வீரமணிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT