பெரம்பலூர்

பெரம்பலூரில் திமுக நிா்வாகிகள் கூட்டம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகத்தில், மாவட்ட செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் பரமேஷ்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா் பாஸ்கா், மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் சி.ராஜேந்திரன், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து பேசினாா்.

கூட்டத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை ஓராண்டுக்கு கொண்டாடுவது, இதையொட்டி ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் விழாவில் பெரம்பலூா் மாவட்டத்திலிருந்து திரளாக பங்கேற்பது, ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளைகளிலும் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கட்சிக்கு அதிகளவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கையில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இதில், ஒன்றியச் செயலா்கள் என். கிருஷ்ணமூா்த்தி, எம். ராஜ்குமாா், மதியழகன், சோமு. மதியழகன், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் செந்தில்நாதன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் மகாதேவி ஜெயபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் து. ஹரிபாஸ்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT